க்ஷேமம் குரு கோபாலா...சந்ததம் மம க்ஷேமம் குரு கோபாலா.....க்ஷேமம் குரு கோபாலா...சந்ததம் மம க்ஷேமம் குரு கோபாலா.....க்ஷேமம் குரு கோபாலா...சந்ததம் மம க்ஷேமம் குரு கோபாலா..... சந்ததம் மம க்ஷேமம் குரு கோபாலா.....

Thursday, February 18, 2016

வரகூர் கருட சேவை

16.02.2016, செவ்வாய் கிழமை அன்று வரகூர் பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.  இவ்வைபவம், ஒவ்வொரு வருடம் சத்குரு ஆராதனை நடைபெற்ற மறுநாள் நடைபெறும்.

பெருமாள் கருடன் மீது அமர்ந்து, அஷ்டபதி, தரங்கம் கீதங்களுடன், சதுர் வேத பாராயணம், திருவந்தி  காப்பு மற்றும் கோணங்கி சேவையுடன் கூடிய சம்ப்ரதாய சப்த ப்ரதக்ஷினம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின் ஏகாந்த சேவை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tuesday, February 16, 2016


சத்குரு ஸ்ரீ நாராயணதீர்த்தரின் இவ்வருட ஆராதனை வெகு சிறப்பாக வரகூரில் நடைபெற்றது.  பிப்ரவரி 12ஆம் தேதி (12.02.2016) தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை (14.02.2016) வரகூர் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், பெருமாள் சன்னதியில்,   வரகூர்  பாகவதர்களால்  சத்குரு ஸ்ரீ நாராயணதீர்த்தர் இயற்றிய ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணீ கீதங்கள் (அனைத்தும் தரங்கங்களும்) பாடப்பட்டது.  

மேலும், சத்குரு ஆராதனை தினமான, மாசி மாதம், சுக்ல பக்ஷ் அஷ்டமி திதியன்று, அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி (15.02.2016) வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மீது அவரால் ஸ்தோஸ்திரம் செய்யப்பட்ட  அவரது இரண்டாவது காவியமான வரகூர் ஸ்ரீ வெங்கடேச மஹிமா ஸ்தோஸ்திரங்கள் (இதுவும் தரங்கிணீ கீதங்கள் போல் 120 ஸ்தோஸ்திரம் கொண்டவை) துதிக்கப்பட்டு பின் சத்குரு திரு உருவ படம் சத்குரு ப்ருந்தாவனமான வரகூர் சிவாலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு ருத்ர திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது. அதன்பின், சுமார் காலை 11 மணியளவில் சத்குரு ஆராதனை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கபட்டு, வேத பாராயணம் மற்றும் தரங்கிணீ கீதங்கள் இசைக்கப்பட்டு ஆராதனை வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின், மாலை சுமார் 5.30 மணியளவில், சத்குரு ஸ்ரீ நாராயணதீர்த்தர் (திரு உருவ படம்), வேத பாராயணத்துடன், வரகூர் பாகவதர்கள் தரங்கிணி கீதங்கள் இசைக்க வீதீயுலா வந்து பக்த்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வராஹபுரி ஸ்ரீ வெங்கடேச மூர்த்திக்கி ஜெய்..!
சத்குரு ஸ்ரீ நாராயணதீர்த்தர் ஸ்வாமிக்கி ஜெய்..!